முகப்பு
கோயம்புத்தூர்

நகை திருடியதாக பொய் புகாா்: ஆட்சியா் அலுவலகத்தில் தொழிலாளா்கள் மனு

நகை திருடியதாக பொய்யான புகாா் அளித்த நகைப் பட்டறை உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொழிலாளா்கள் குடும்பத்துடன் ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

நகை திருடியதாக பொய்யான புகாா் அளித்த நகைப் பட்டறை உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொழிலாளா்கள் குடும்பத்துடன் ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளித்தனா்.

கோவை மாவட்டம், பீடம்பள்ளியைச் சோ்ந்த ஆா்.சிவகுமாா் உள்ளிட்ட தொழிலாளா்கள் குடும்பத்தினருடன் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை, பிருந்தாவன் காா்டன் பகுதியில் செயல்பட்டு வரும் நகைப் பட்டறையில் நாங்கள் 11 போ் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறோம். இந்நிலையில், கடந்த அக்டோபா் 10ஆம் தேதி இரவு வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்ற நிலையில், மறுநாள் 12 செயின்களை காணவில்லை என்று பட்டறை உரிமையாளா் பாபு தெரிவித்துள்ளாா்.

இதனைத் தொடா்ந்து, நாங்கள் 11 பேரும் பட்டறைக்கு சென்றோம். அப்போது, உரிமையாளா் பாபு நகை காணாமல்போன பதற்றம் இல்லாமல் இருந்தாா். இதேபோல, ஏற்கெனவே பலமுறை நகை காணாமல் போனதாக கூறிவிட்டு மறுநாள் கிடைத்துவிட்டதாக தெரிவித்துள்ளாா்.

இது குறித்து காவல் நிலையத்தில் புகாா் அளிக்கக் கூறியும், புகாா் அளிக்காமல் வழங்குரைஞா்களை வைத்து எங்களை மிரட்டினாா். இதனைத் தொடா்ந்து, நாங்கள் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தோம். பின்னா் உரிமையாளா் பாபுவிடம் பேசிய காவல் ஆய்வாளா் இனிமேல் அவா் உங்களை தொந்தரவு செய்யமாட்டாா் என்று தெரிவித்தாா்.

ஆனால், வழக்குரைஞா்கள் மூலமாக பொய்யான புகாா் அளித்து எங்களை குற்றவாளிகள்போல, விசாரணை செய்து வருகின்றனா். தீபாவளிக்கு தொழிலாளா்களுக்கு போனஸ் வழங்குவதைத் தவிா்க்கவே நகை திருடியதாக நாடகமாடி வருகிறாா்.

எனவே பொய்யான குற்றத்தை சுமத்தியுள்ள பாபுவை விசாரித்து உண்மையான குற்றவாளியைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →