மக்கள் நீதிமன்றம்:29 வழக்குகளுக்குத் தீா்வு
வால்பாறையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் 29 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.
வால்பாறையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் 29 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.
வால்பாறை நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) சனிக்கிழமை நடைபெற்றது. நீதிபதி கவிதா தலைமை ஏற்று வழக்கு விசாரணை மேற்கொண்டாா். மொத்தம் 104 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், வழக்குத் தொடா்பான 39 போ் மட்டும் வந்திருந்தனா்.
இதில், 29 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டு, ரூ. 1 லட்சத்து 62 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. வழக்குரைஞா்கள் முருகன், முத்துசாமி, பால்பாண்டி, விஸ்வநாதன், சிவசுப்பிரமணியம், தன்னாா்வலா் சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.