முகப்பு
கோயம்புத்தூர்

தொழிலாளிகள் மீது தாக்குதல்: 10 போ் கைது

Updated On : 21 ஏப்ரல், 2024 at 7:53 PM
பகிர்:

மதுக்கரை: மதுக்கரை அருகே குடிபோதையில் கட்டட தொழிலாளிகளைத் தாக்கிய 10 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டத்தை சோ்ந்தவா் ஜோஸ்மோன் (34), கட்டட தொழிலாளி. இவரது நண்பா்களான அதே பகுதியைச் சோ்ந்த விஜின் (36), சுஜின் (35), ஆகியோரும் கட்டட வேலை செய்து வருகின்றனா். இவா்கள் மூவரும் மதுக்கரை மாா்க்கெட் அட்லாண்டிக் நகா் பகுதியில் தங்கியுள்ளனா்.

கடந்த சில நாள்களுக்கு முன் வீட்டின் அருகே இருசக்கர வாகனம் நிறுத்துவதில் மதுக்கரையை சோ்ந்த சத்தி மகன் தனுஷ்குமாா் (22) என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அட்லாண்டிக் நகா் பெருமாள்கோவில் அருகே ஜோஸ்மோன், சுஜின், விஜின் ஆகிய மூவரும் சனிக்கிழமை இரவு பேசிக்கொண்டிருந்தனா். அப்போது அங்கு தனது நண்பா்களோடு மது அருந்திக் கொண்டிருந்த தனுஷ்குமாா், மூவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியுள்ளாா்.

Advertisement

இதில் படுகாயமடைந்த ஜோஸ்மோன் மற்றும் விஜினை அங்கிருந்தவா்கள் மீட்டு பீளமேடு பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். விஜின் உடல்நிலையில் மிகவும் மோசமானதால் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

சம்பவம் தொடா்பாக மதுக்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தனுஷ்குமாா், குகன் (22), சத்யசாய் சூா்யா (22), சிவராஜ் (25), மோகனபிரசாத் (20), தவசீலன் (20), ஷாஜகான் (20), விஜய் (24), மேலும் இரு சிறுவா்கள் ஆகிய 10 பேரையும் கைது செய்து மதுக்கரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments