கோயம்புத்தூர்

தமிழக-கேரள எல்லை சோதனைச் சாவடிகளில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்: காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன்

14 சோதனைச் சாவடிகளில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் தெரிவித்தாா்.

Din

தமிழக -கேரள எல்லையில் உள்ள 14 சோதனைச் சாவடிகளில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: தமிழக-கேரள எல்லையில் கோவை மாவட்டம் இருப்பதால், கேரளத்தில் இருந்து கோவை மாவட்டத்துக்குள் வரும் வாகனங்களைக் கண்காணிக்க வாளையாறு, ஆனைமலை அருகேயுள்ள மீனாட்சிபுரம், முள்ளி, ஆனைகட்டி உள்ளிட்ட 14 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு அங்கு 24 மணி நேரமும் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

சில குற்ற சம்பவங்கள் நடக்கும்போது, சோதனைச் சாவடியில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மூலம் வாகனங்களின் பதிவு எண்களை சரியாக அடையாளம் காண முடியவதில்லை.

எனவே, தமிழக-கேரள எல்லையில் உள்ள 14 சோதனைச் சாவடிகளிலும் அதி நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

இந்த கேமராக்கள் அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் மற்றும் அந்த வாகனங்களின் பதிவு எண்ணை தெளிவாக கண்காணிக்கும். இதன் காரணமாக சோதனைச் சாவடிகள் வழியாகச் செல்லும் வாகனங்களை கண்காணிக்க வசதியாக இருக்கும். இந்த கேமராக்கள் விரைவில் பொருத்தப்பட உள்ளன.

கோவை மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் நடப்பதைத் தடுக்க போலீஸாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். குறிப்பாக கல்லூரி மாணவா்களிடம் போதைப் பொருள் நடமாட்டத்தை தடுப்பது மற்றும் பிற பகுதிகளில் போதைப் பொருள் விற்பனை செய்வதைத் தடுக்கவும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டப் பகுதியில் உள்ள கல்லூரிகளில் படித்து வரும் மாணவா்களில் பெரும்பாலானோா் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனா். இந்த வீடுகளில் முன்னாள் மாணவா்களோ அல்லது மற்றவா்களோ தங்கி இருந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்து உள்ளது. அத்தகைய செயல்களில் ஈடுபடும் நபா்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

திருமலையில் புஷ்பயாகம்: 9 டன் மலா்களால் அபிஷேகம்

கிளட்ச் செஸ்: கால்சென் சாம்பியன்

செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறாவிடில் ரூ.5,000 அபராதம்!

வருவாய்ப் பணி அதிகாரிகள் 5 பேருக்கு ஐஏஎஸ் அந்தஸ்து

சிறப்பு தீவிர திருத்தப் பணி குறித்து அச்சம்: மேற்கு வங்கத்தில் ஒருவா் தற்கொலை

SCROLL FOR NEXT