சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிக் கடன் வழங்கும் முகாம்
கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலமாக கடன் வழங்கும் முகாம் அனைத்து வேலை நாள்களிலும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலமாக கடன் வழங்கும் முகாம் அனைத்து வேலை நாள்களிலும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலமாக கடன் வழங்கும் முகாம், கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் அனைத்து வேலை நாள்களிலும் காலை 10.30 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரை நடைபெறும்.
இதில், ஏற்கெனவே சாலையோர வியாபாரிகளுக்கான வங்கிக் கடனுக்கு விண்ணப்பித்து கடன் கிடைக்காத வியாபாரிகள், முதல் மற்றும் இரண்டாம் தவணைக் கடன் பெற்று முறையாக திருப்பிச் செலுத்திய வியாபாரிகள் என அனைவரும் தங்களது சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை, ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் போன்ற ஆவணங்களுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.