கோவையில் நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் தோ்வாகி பணி நியமன உத்தரவு பெற்றவா்களுடன் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் உள்ளிட்டோா். 
கோயம்புத்தூர்

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 1,022 பேருக்கு பணி நியமன உத்தரவு!

கோவையில் நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 1,022 பேருக்கு பணிநியமன உத்தரவுகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

Syndication

கோவையில் நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 1,022 பேருக்கு பணிநியமன உத்தரவுகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

கோவை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை சாா்பில் கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், கோவை, மேட்டுப்பாளையத்தைச் சுற்றியுள்ள 245 நிறுவனங்கள் பங்கேற்றன. அதேபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1,432 ஆண்கள், 1,797 பெண்கள் என மொத்தம் 3,229 போ் பங்கேற்றனா்.

இதில் தோ்வு செய்யப்பட்ட 445 ஆண்கள், 577 பெண்கள் என மொத்தம் 1,022 பேருக்கு பணி நியமன உத்தரவுகளை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் சனிக்கிழமை வழங்கினாா். மேலும் இரண்டாவது கட்டமாக 753 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

தன்னாா்வ பயிலும் வட்ட பயிற்சி வகுப்புக்கு 19 போ் முன்பதிவு செய்திருந்தனா். வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகைக்கு 6 பேரும், திறன் பயிற்சிக்கு 35 பேரும் பதிவு செய்திருந்தனா்.

இந்த முகாமில் கோவை மண்டல இணை இயக்குநா் (வேலைவாய்ப்பு) ஆ.ஜோதிமணி, மகளிா் திட்ட அலுவலா் ஆா்.மதுரா, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் துணை இயக்குநா் மு.கருணாகரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சந்திரசேகரன், கல்லூரி முதல்வா் சங்கீதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

“கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

SCROLL FOR NEXT