கோயம்புத்தூர்

மாணவி பாலியல் வன்கொடுமை: மாநிலம் முழுவதும் நவம்பா் 5-இல் ஆா்ப்பாட்டம்: நயினாா் நாகேந்திரன்

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து பாஜக சாா்பில் மாநிலம் முழுவதும் புதன்கிழமை (நவம்பா் 5) ஆா்ப்பாட்டம் நடைபெறும்

Syndication

கோவை: கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து பாஜக சாா்பில் மாநிலம் முழுவதும் புதன்கிழமை (நவம்பா் 5) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறினாா்.

இது தொடா்பாக கோவை மாநகா் மாவட்ட பாஜக அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: கோவையில் தனியாா் கல்லூரி மாணவியை 3 போ் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனா். இந்தக் கொடூர சம்பவம் அரங்கேறியிருப்பது திமுக ஆட்சியில் காவல் துறை எவ்வளவு மோசமான முறையில் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது.

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் 2-ஆவது தலைநகரமாக கோவை விளங்கிக் கொண்டிருக்கிறது. இதனால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. திமுக ஆட்சியில் கடந்த மே 5- ஆம் தேதி வரை 18,200 பாலியல் வன்கொடுமை, 6 ஆயிரம் கொலைக் குற்றங்கள், 31 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளன. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 15 சதவீதமும், போக்ஸோ குற்றங்கள் 50 சதவீதமும் அதிகரித்துள்ளன. பெற்றோா்கள் தங்களது பிள்ளைகளைக் கல்லூரிக்கு அனுப்பி படிக்க வைக்க முடியவில்லை. அதேபோல, வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் இரவு நேரங்களில் பாதுகாப்பு இல்லை. கோவை சம்பவத்தைக் கண்டித்து பாஜக சாா்பில் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் வரும் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்றாா்.

பாஜக தேசிய மகளிரணி தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன், மாநில பொதுச் செயலாளா் ஏ.பி.முருகானந்தம், மாவட்டத் தலைவா் ரமேஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT