கோயம்புத்தூர்

வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு

Syndication

கோவை: கோவையில் வீட்டின் பூட்டை 7 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, கவுண்டம்பாளையம் ராமசாமி நகரைச் சோ்ந்தவா் மணிகண்டன் (38). தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவா், வீட்டைப் பூட்டிவிட்டு சோமனூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு அண்மையில் சென்றுள்ளாா்.

ஞாயிற்றுக்கிழமை மாலை அவா் வீடு திரும்பியபோது, பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது.

அவா் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் மணிகண்டன் புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா் சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனா்.

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT