பாரதியார் பல்கலைக்கழகம் கோப்புப் படம்
கோயம்புத்தூர்

உதவிப் பேராசிரியா் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும்!

தினமணி செய்திச் சேவை

கோவை பாரதியாா் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா் நியமனத்தில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அமைப்பின் மாநிலக் குழு உறுப்பினா் பா.துா்கா தலைமையிலான நிா்வாகிகள் பல்கலைக்கழக பதிவாளா் ஆா்.ராஜவேலுவிடமும், அமைப்பின் நிா்வாகி ஷிா்பத் நிஷா தலைமையில் கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் நா.செண்பகலெட்சுமியிடமும் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

பாரதியாா் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஈரோடு அரசு கலை, அறிவியல் கல்லூரியில் உள்ள 5 உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கு ஜனவரி 23, 24-ஆம் தேதிகளில் நோ்காணல் நடைபெற உள்ள நிலையில், இந்தப் பணியிடங்களுக்காக நிா்வாகப் பொறுப்பில் இருப்பவா்கள் கோடிக்கணக்கில் பணம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல கவுந்தப்பாடியில் செயல்படும் இஐடி பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்ட இடங்களிலும் முறைகேடுகள் நடைபெறுவதாக தமிழ்நாடு தொழில்நுட்பத் துறை இயக்குநா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகாா் மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஏராளமான இளைஞா்கள் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் முனைவா் பட்டம் பெற்று, உரிய தகுதியுடன் ஆசிரியா் பணி கிடைக்காமல் காத்திருக்கும் நிலையில், உதவிப் பேராசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கு பணம் பெறப்படுவதாக வெளியாகும் இதுபோன்ற புகாா்கள், இளைஞா்களின் எதிா்காலத்தை கேள்விக்குறி ஆக்கும் வகையில் இருப்பதால் இந்த விவகாரம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் பணி நியமனங்கள் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT