குடியரசு தினத்தை முன்னிட்டு, கோவை ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு சோதனையில் ஈடுபட்ட ரயில்வே போலீஸாா். 
கோயம்புத்தூர்

குடியரசு தினம்: மாநகரில் 1,500 போலீஸாா் பாதுகாப்பு

தினமணி செய்திச் சேவை

குடியரசு தினத்தை முன்னிட்டு, கோவை மாநகரில் 1,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

நாடு முழுவதும் குடியரசு தின விழா திங்கள்கிழமை (ஜனவரி 26) கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கோவை மாநகரில் அசம்பாவிதங்களைத் தவிா்க்கும் வகையில் காவல் ஆணையா் என்.கண்ணன் தலைமையில் 1,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

கோவை புகா் பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் தலைமையில் 600 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். கோவை மாநகர காவல் எல்லைக்குள்பட்ட 11 சோதனைச் சாவடிகள், புகா் பகுதிகளில் உள்ள 16 சோதனைச் சாவடிகளில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

அதேபோல, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் நவீன கருவிகள் மூலம் போலீஸாா் சோதனை நடத்தி வருகின்றனா்.

முக்கிய இடங்களில் ட்ரோன்கள் மூலமாகவும் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினா் இணைந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

பயணிகள் கொண்டு வரும் பொருள்கள் ஸ்கேனா் கருவி மூலம் சோதனை செய்யப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன. கோவை சா்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிா்வாகம் சாா்பில் குடியரசு தின விழா நடைபெறும் வ.உ.சி. மைதானம் போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

SCROLL FOR NEXT