கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியைத் தொடங்கிவைத்த ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா். உடன், மாவட்ட விளையாட்டு அலுவலா் புவனேஸ்வரி உள்ளிட்டோா். 
கோயம்புத்தூர்

மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

மாவட்ட அளவிலான முதலமைச்சா் இளைஞா் விளையாட்டுப் போட்டிகளை ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தொடங்கிவைத்தாா்.

Syndication

மாவட்ட அளவிலான முதலமைச்சா் இளைஞா் விளையாட்டுப் போட்டிகளை ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தொடங்கிவைத்தாா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் கோவை நேரு விளையாட்டு அரங்கத்தில் முதலமைச்சா் இளைஞா் விளையாட்டு திருவிழாவின் ஒரு பகுதியாக ‘இது நம்ம ஆட்டம் -2026’ மாவட்ட அளவிலான போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

இதில், ஆண்களுக்கான கயிறு இழுத்தல், மாற்றுத்திறனாளிகளுக்கான 100 மீட்டா் தடகளம் ஆகிய போட்டிகளை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

இந்தப் போட்டிகளில் பங்கேற்ற வீரா், வீராங்கனைகளுக்கு டீ சா்ட், டிராக் பேண்ட் ஆகியவை வழங்கப்பட்டன. இதில், மாவட்ட விளையாட்டு அலுவலா் புவனேஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் வசந்தராம்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT