கோயம்புத்தூர்

ஆம்னி பேருந்தில் கடத்தி வரப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

DIN

பெங்களூரில் இருந்து ஆம்னி பேருந்தில் கோவைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 1 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 கர்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து ஆம்னி பேருந்து மூலமாக கோவைக்கு தடை செய்யப்பட்ட  புகையிலைப் பொருள்கள் கடத்தி வரப்படுவதாக மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் விஜயக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
 அவரது உத்தரவின்பேரில், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ஜெரால்டு சத்யபுனிதன், ராஜேந்திரன், சக்திவேல், சந்திரன் ஆகியோர் கோவை, கருமத்தம்பட்டி சுங்கச் சாவடி மற்றும் நீலாம்பூர் சோதனைச் சாவடிப் பகுதிகளில் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த பேருந்துகளில் சோதனை நடத்தியதில் பெங்களூரில் இருந்து வந்த தனியார் ஆம்னி பேருந்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பொருள்கள் கோவை, தாமஸ் வீதியைச் சேர்ந்த கணபதி என்பவருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, 13 பண்டல்களில் இருந்த தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து, உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் விஜய் கூறியதாவது:
ஆம்னி பேருந்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 1 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மாதிரிகள் சேரிக்கப்பட்டு ரசாயனப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்படும். மீதமுள்ள புகையிலைப் பொருள்கள் அழிக்கப்படும். இதை யார் அனுப்பியது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
வெளிமாநிலங்களில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தி வருவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.  இதுதொடர்பாக, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பு கடித்து பழங்குடியின இளைஞா் காயம்

கஞ்சா விற்றதாக பிகாா் இளைஞா்கள் 2 போ் கைது

கிருஷ்ணகிரியில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ராமநாதபுரம்-புவனேஸ்வா் ரயிலில் கூடுதல் பெட்டி

பைக்கில் வைத்திருந்த ரூ.5 லட்சம் மாயம்

SCROLL FOR NEXT