கோயம்புத்தூர்

தலைமைச் செயலகத்தில் மத்திய அமைச்சர் ஆய்வு: தமிழக அரசின் பலவீனத்தைக் காட்டுகிறது

DIN

தலைமைச் செயலகத்தில் மத்திய அமைச்சர் ஆய்வு நடத்தியதில் இருந்து, தமிழக அரசு மிகவும் பலவீனமானதாக உள்ளது என்பது தெரியவந்திருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கோவையில் புதுப்பிக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் தலைமை அலுவலகமான ஜீவா இல்லத்தின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த  அலுவலகத்தைத் திறந்து வைத்த முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் வறட்சி பாதிப்பு, மதுவிலக்குப் போராட்டங்கள், மருத்துவ மேல்படிப்பில் இடஒதுக்கீடு ரத்து, காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்காதது என பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ள நிலையில், தங்களின் உரிமைகளுக்காகப் போராடும் மக்கள் மீது காவல் துறை கண்மூடித்தனமான தாக்குதலை நிகழ்த்தி வருகின்றன.
மக்களின் நலன்கள் மீது அக்கறையின்றி செயல்படும் தமிழக ஆட்சியாளர்கள், தங்களின் பதவியைக் காத்துக்கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர். தமிழக அரசியல் வரலாற்றில் மத்திய அமைச்சர் ஒருவர் தலைமைச் செயலகத்துக்கு வந்து அரசின் நடவடிக்கைகளை ஆய்வு செய்த நிகழ்வு நடைபெற்றதில்லை.
அதேபோல், பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற அதே அமைச்சர், தமிழக முதல்வரை நேரடியாக மிரட்டி ஜனநாயகத்துக்கு எதிரான செயலில் ஈடுபட்டார். மாநில அரசின் சுயமரியாதையைக் கேள்வி கேட்கக் கூடிய இதுபோன்ற செயல்களில் பாஜக ஈடுபட்டு வருவது தமிழக அரசின் பலவீனத்தையே காட்டுகிறது.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள விவசாயிகளின் கடன்களை மத்திய அரசே ரத்து செய்ய வேண்டும் என்ற நிலையில், அதை மாநில அரசு செய்ய வேண்டும் என்று அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறுகிறார்.
தனியார் நிறுவனங்களின் கடன் தொகையான ரூ. 13 லட்சம் கோடியைத் தள்ளுபடி செய்துள்ள மத்திய அரசு, தமிழக விவசாயிகளுக்கு ரூ. 2 ஆயிரம் கோடி மட்டுமே வறட்சி நிவாரணம் ஒதுக்கியுள்ளது.
அதிமுகவின் இரு அணிகளும் இணைவது எடப்பாடி பழனிசாமி கையிலோ, ஓ.பன்னீர்செல்வம் கையிலோ இல்லை. அது பிரதமர் மோடியின் கைகளில்தான் இருக்கிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT