தேவாலயம், குடியிருப்புகளை சேதப்படுத்திய யானைகள்
எஸ்டேட் பகுதிக்குள் நுழைந்த யானைகள் அங்குள்ள தேவாலயம் மற்றும் குடியிருப்புகளை சேதப்படுத்தியுள்ளன.
எஸ்டேட் பகுதிக்குள் நுழைந்த யானைகள் அங்குள்ள தேவாலயம் மற்றும் குடியிருப்புகளை சேதப்படுத்தியுள்ளன.
வால்பாறையை அடுத்த முருகன் எஸ்டேட் பகுதிக்குள் 5 யானைகள் செவ்வாய்க்கிழமை இரவு நுழைந்துள்ளன. குடியிருப்புப் பகுதிக்குச் சென்ற யானைகள் அங்குள்ள இரண்டு வீடுகளின் ஜன்னல், கதவுகளை முட்டி சேதப்படுத்தின.
பின்னர், அருகில் உள்ள அங்கன்வாடி மையம் மற்றும் தேவாலயத்தின் சுவர்களை இடித்துச் சேதப்படுத்தின.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் மீண்டும் குடியிருப்புப் பகுதிக்கு யானைகள் வருவதைத் தடுக்க தீப்பந்தங்கள் ஏற்றி, யானைகளை அப்பகுதியில் இருந்து விரட்டியுள்ளனர்.