மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள்
பெரியநாயக்கன்பாளையத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
பெரியநாயக்கன்பாளையத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
ரங்கசாமி நாயுடு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, கவுண்டம்பாளையம் சட்டப்பேரவை உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி தலைமை வகித்து 158 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.
பெ.நா.பாளையம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் கோவனூர் கே.துரைசாமி, முன்னாள் கவுன்சிலர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை மலர்விழி வரவேற்றார். தொடர்ந்து அவர், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய சுவாமி சிவானந்தா மேல்நிலைப் பள்ளி, நாயக்கன்பாளையத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். விழாவில் சிவானந்தா மேல்நிலைப் பள்ளியின் செயலர் சுவாமி நிர்மலேஷானந்தர், தலைமை ஆசிரியர்கள் பரமசிவம்,வேலுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.