உணவகங்களில் 5 சதவீத ஜி.எஸ்.டி.: கோவையில் அமலுக்கு வந்தது
கோவை உணவகங்களில் 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்பு புதன்கிழமை அமலுக்கு வந்தது.
கோயம்புத்தூர்உணவகங்களில் 5 சதவீத ஜி.எஸ்.டி.: கோவையில் அமலுக்கு வந்தது
கோவை உணவகங்களில் 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்பு புதன்கிழமை அமலுக்கு வந்தது.
கோவை உணவகங்களில் 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்பு புதன்கிழமை அமலுக்கு வந்தது.
கடந்த ஜூலை மாதம் ஜி.எஸ்.டி. முதல் முறையாக அமலுக்கு வந்தபோது, குளிர்சாதன வசதி கொண்ட ஹோட்டல்களில் 18 சதவீத சேவை வரியும், குளிர்சாதன வசதியில்லாத உணவகங்களில் 12 சதவீத வரியும் விதிக்கப்பட்டன. இந்த நிலையில், அண்மையில் அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், உணவகங்களுக்கு ஒரே மாதிரியான 5 சதவீத வரி விதிப்பு செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.
திருத்தப்பட்ட வரி விகிதம் நவம்பர் 15-ஆம் தேதி முதல் நாடு முழுவதிலும் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கோவையில் உள்ள பெரும்பாலான பெரிய உணவகங்களில் 5 சதவீத வரி விதிப்பு முறை புதன்கிழமை அமலுக்கு வந்தது.