பிப்ரவரி 26-இல் சின்னம்மன், பெரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
அன்னூரில் உள்ள 1,000 ஆண்டுகள் பழமையான சின்னம்மன், பெரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
அன்னூரில் உள்ள 1,000 ஆண்டுகள் பழமையான சின்னம்மன், பெரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
அன்னூர் - ஓதிமலை சாலையில் உள்ள பெரியம்மன் கோயில் மற்றும் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சின்னம்மன் கோயில் 1,000 ஆண்டுகள் பழமையானது.
இந்தக் கோயில்களுக்கு திருப்பணிகள் செய்ய திருப்பணிக்குழு அமைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக இந்தக் கோயில்களில் ரூ. 1.5 கோடி மதிப்பீட்டில் அர்த்த மண்டபம், மகா மண்டபம், கருவறை, கோபுரம், சுற்றுசுவர் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன.
இதையடுத்து, பிப்ரவரி 24-ஆம் தேதி காலை கணபதி வேள்வியுடன் கும்பாபிஷேகம் தொடங்குகிறது. 24-ஆம் தேதி முதல் கால பூஜையும், 25-ஆம் தேதி 2, 3 கால பூஜைகளும் நடைபெறுகின்றன. 26-ஆம் தேதி காலை 6.30 மணியளவில் சின்னம்மன் கோயிலுக்கும், 9.30 மணியளவில் பெரியம்மன் கோயிலுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில், கூனம்பட்டி ஆதீனம் நடராஜ சுவாமிகள் அருளுரை
வழங்குகிறார்.
கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளைத் திருப்பணிக் குழுவினர், பொது மக்கள் செய்து வருகின்றனர்.