தொழில் நிறுவனத்தில் ரூ.13 லட்சம் பொருள்கள் திருட்டு
சூலூர்அருகே தொழில் நிறுவனத்தில் ரூ.13 லட்சம் மதிப்பிலான பொருள்களை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.
சூலூர்அருகே தொழில் நிறுவனத்தில் ரூ.13 லட்சம் மதிப்பிலான பொருள்களை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.
சூலூர் அருகேயுள்ள மயிலம்பட்டியில் தங்கதுரை என்பவருக்குச் சொந்தமான என்ஜினீயரிங் தொழில் நிறுவனம் உள்ளது. இங்கு சமையல் பாத்திரங்கள், உபகரணங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில் ஜூலை1ஆம் தேதி இரவு மர்மநபர்கள் நிறுவனத்தின் கதவை உடைத்து அங்கிருந்த அலுமினிய சமையல் பொருள்கள் மற்றும் உபகரணங்களை சாக்குகளில் கட்டி வேன்மூலம் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து நிறுவன உரிமையாளர்அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இத் திருட்டில் பல பேர் ஈடுபட்டிருப்பது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதை வைத்து திருடியவர்களைஅடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக சூலூர் வட்ட காவல் ஆய்வாளர் தங்கராஜ் தெரிவித்தார்.