முகப்பு
கோயம்புத்தூர்

மூதாட்டியிடம் 12 பவுன் நகைப் பறிப்பு

மூதாட்டியிடம் 12 பவுன் நகையைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Updated On : 13 நவம்பர், 2018 at 3:46 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:47 PM


மூதாட்டியிடம் 12 பவுன் நகையைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
கோவை, ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி (70). இவரது மனைவி சாந்தகுமாரி (62). இவர்கள் இருவரும் திருச்சி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு காரில் வந்துள்ளனர். திருமண மண்டபத்துக்கு எதிரே காரை நிறுத்தி விட்டு சாலையை கடந்துள்ளனர்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சாந்தகுமாரி அணிந்திருந்த 12 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். மர்ம நபர்கள் நகையைப் பறித்தபோது நிலை தடுமாறிக் கீழே விழுந்ததில் சாந்தகுமாரிக்குத் தலை, கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மூர்த்தி அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் குற்றப் பிரிவுக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
பொள்ளாச்சி, நவ. 12: பொள்ளாச்சி அருகே மருந்துக் கடை உரிமையாளரின் வீட்டுப் பூட்டை உடைத்து 13 பவுன் நகை, ரூ. 60 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றவர்களைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
பொள்ளாச்சியை அடுத்த ஏரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (43). மருந்துக்கடை உரிமையாளர். இவர், வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஞாயிற்றுக்கிழமை காலையில் வெளியூர் சென்றுவிட்டார். பின்னர், மீண்டும் மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 13 பவுன் நகை மற்றும் ரூ. 60 ஆயிரம் திருட்டுப் போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து செந்தில்குமார் அளித்த புகாரின்பேரில் நெகமம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.