முகப்பு
கோயம்புத்தூர்

தேசிய பார்வையற்றோர் இணையம் சார்பில் நிவாரணப் பொருள்கள்

கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 100 மாற்றுத் திறனாளிகள் குடும்பத்தினருக்கு கோவை தேசிய பார்வையற்றோர் இணையம் சார்பில் நிவாரணப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை அனுப்பப்பட்டன. 

Updated On : 3 செப்டம்பர், 2018 at 7:35 AM
பகிர்:

கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 100 மாற்றுத் திறனாளிகள் குடும்பத்தினருக்கு கோவை தேசிய பார்வையற்றோர் இணையம் சார்பில் நிவாரணப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை அனுப்பப்பட்டன. 
கேரளத்தில் அண்மையில் பெய்த பலத்த மழையால் திருச்சூர், வயநாடு உள்ளிட்ட பல்வேறு மாவட்ட  மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு பல்வேறு அமைப்பினர் நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், தேசிய பார்வையற்றோர் இணையம் சார்பில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பல்வேறு நிவாரணப் பொருள்கள் சேகரிக்கப்பட்டன. இந்தப் பொருள்கள் சரக்கு ஆட்டோ மூலமாக கோவையில் இருந்து கேரளத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பப்பட்டன. 
இந்தப் பொருள்கள் திருச்சூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 100 மாற்றுத் திறனாளிகள் குடும்பத்தினருக்கு வழங்கப்படவுள்ளன. 
அதே போல், கோவை, தனலட்சுமிபுரத்தில் உள்ள கேரள கலாசார மையம் சார்பில் ரூ. 35 லட்சத்து 45 ஆயிரத்துக்கு வரைவோலை, காசோலைகள் கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்காக அண்மையில் வழங்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.