கோயம்புத்தூர்

வேலைவாய்ப்பு அதிகரிக்க புதிய தொழிற்பேட்டை உருவாக்கப்படும்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கல்யாணசுந்தரம்

வேலைவாய்ப்பு மிகுந்த நகரமாக கோவையை உருவாக்க புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்க நடவடிக்கை எடுப்பேன்

DIN

வேலைவாய்ப்பு மிகுந்த நகரமாக கோவையை உருவாக்க புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்க நடவடிக்கை எடுப்பேன் என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கல்யாணசுந்தரம் தெரிவித்தார்.
 கோவை காந்திபுரம், ரேஸ்கோர்ஸ் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவர் பேசியதாவது:  நொய்யல் ஆற்றை தூர்வாரி, அதன் வழித்தடங்களை சீரமைத்து குளம், கால்வாய், குட்டைகளில் நீர் நிரப்ப நடவடிக்கை எடுப்பேன். 
 சிறு, குறு தொழில்கள் நசிவால் கோவையில் வேலைவாய்ப்புகள் முடங்கியுள்ளன. எனவே, வேலைவாய்ப்பு மிகுந்த கோவை என்ற திட்டத்தின் கீழ் புதிய தொழிற்பேட்டைகளை ஏற்படுத்துவேன். படித்த இளைஞர்கள், பொதுமக்கள் ஆகியோர் மாற்று அரசியல் புரட்சியை ஏற்றுக் கொள்ளும் முனைப்பில் உள்ளனர் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும்: வேலூா் இப்ராஹிம்

‘யாசகம்’ இகழ்ச்சி அல்ல!

அந்தியூரில் ரூ.3.44 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முன்னாள் ஆட்சியா் எழுதிய நூல்கள் வெளியீடு

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்: ஆனந்த்

SCROLL FOR NEXT