கோயம்புத்தூர்

தொடர் மழை: பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம் 24, 25ஆம் தேதிகளில் செயல்படாது: வனத் துறை அறிவிப்பு

DIN

மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைப் பகுதியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை எதிரொலியாக பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம் ஆகஸ்ட் 24, 25 ஆகிய தேதிகளில் செயல்படாது என காரமடை வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

காரமடை வனத் துறையின் கட்டுப்பாட்டில் பரளிக்காடு, பூச்சிமரத்தூர் பகுதி உள்ளன. இங்கு வாரந்தோறும் இணையதளம் மூலம் சுற்றுலாப் பயணிகள் முன்பதிவு  செய்து சூழல் சுற்றுலா வருவது வழக்கம். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பழங்குடியின மக்களின்  உணவுகள், படகு சவாரி, வன விலங்குகள் நடமாட்டத்தைப் பார்வையிடுதல் உள்ளிட்டவை வனத் துறை சார்பில் ஏற்பாடு செய்துதரப்படுகிறது. 

இந்நிலையில், கடந்த 10 நாள்களுக்கு முன்பு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டியுள்ள  கேரளம்,  நீலகிரி பகுதிகளில் கனமழை பெய்ததால் பில்லூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. அணையின் பாதுகாப்புக் கருதி கடந்த 2 வாரங்களாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பரளிக்காடு  சூழல் சுற்றுலா தளம் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி செயல்படவில்லை. 

இந்நிலையில், பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியான கேரள மாநில நீரதாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த  வாரமும் 24, 25 ஆகிய தேதிகளில் பரளிக்காட்டில் சூழல் சுற்றுலா தடை  செய்யப்பட்டுள்ளதாக காரமடை வனச் சரகர் சரவணன் தெரிவித்துள்ளார். இதனால்,  பரளிக்காடு சூழல் சுற்றுலா மையத்துக்கு வர முன்பதிவு செய்ய முடியாமல் சுற்றுலாப் பயணிகள் பலரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT