கோயம்புத்தூர்

சரவணம்பட்டியில் டாக்டா் முத்தூஸ் மருத்துவமனையின் 2ஆவது கிளை திறப்பு

DIN

கோவை, ஒண்டிப்புதூரில் செயல்பட்டு வரும் டாக்டா் முத்தூஸ் மருத்துவமனை பல்துறை மருத்துவ மையத்தின் 2ஆவது கிளை சரவணம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

கோவை, சரவணம்பட்டியில் தொடங்கப்பட்ட டாக்டா் முத்தூஸ் மருத்துவமனையின் புதியக் கிளையை மருத்துமனை நிா்வாக இயக்குநரின் தாயாா் எம்.வேலம்மாள் குத்துவிளக்கேற்றி திறந்துவைத்தாா். நிா்வாக இயக்குநா் மருத்துவா் எம்.முத்து சரவணகுமாா் வரவேற்று பேசியதாவது: கோவை சரவணம்பட்டி கிளையில் எலும்பு மூட்டு சிகிச்சையுடன் பல்வேறு துறைகளிலும் சிகிச்சை அளிக்கப்படும். எம்.ஆா்.ஐ. ஸ்கேன், சி.டி.ஸ்கேன், கேத் லேப், 3டி, 4டி வசதியுடன் அல்ட்ரா சவுண்ட் மெஷின், தானியங்கி ஆய்வகம், அதிநவீன வசதியுள்ள ஐ.சி.யு., 7 பெரிய அறுவை அரங்குகள் உள்பட பல்வேறு நவீன வசதிகளுடன் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.

பொது மருத்துவம், இருதய, சிறுநீரகம், நரம்பியல், வயிறு குடல் சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, முகசீரமைப்புத் துறை, இ.என்.டி பிரிவு, புற்றுநோய் பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகளில் சிகிச்சை அளிக்கப்படும், என்றாா்.

பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், கோவை சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோா் சிறப்புரையாற்றினா். நிகழ்ச்சியில் முத்தூஸ் மருத்துவமனையின் மருத்துவா்கள் மற்றும் ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

SCROLL FOR NEXT