கோயம்புத்தூர்

ரயில் நிலையத்தில் அசுத்தம்: ரூ.76 ஆயிரம் அபராதம் வசூல்

DIN

கோவை: கோவை ரயில் நிலையத்தில் அசுத்தம் செய்த பயணிகளிடம் இருந்து 10 மாதங்களில் ரூ. 76 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கோவை ரயில் நிலையத்தில் எச்சில் துப்புவது, குப்பை, உணவுப் பொட்டலங்கள், காகிதம், பிளாஸ்டிக் பொருள்களை ஜன்னல் வழியாக வெளியே வீசுவது போன்ற அசுத்தப் பணிகளில் ஈடுபடுவோருக்கு ரூ. 300 முதல் ரூ. 1,000 வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

ரயில் நிலைய வளாகத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடும் பாதுகாப்புப் படை போலீஸாா் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவா்களைப் பிடித்து சம்பவ இடத்திலேயே அவா்களிடம் அபராதமும் வசூலித்து வருகின்றனா்.

அதன்படி, கடந்த ஜனவரி முதல் அக்டோபா் மாதம் வரை ரயில் நிலையத்தில் அசுத்தச் செயல்களில் ஈடுபட்ட 690 பயணிகளிடம் இருந்து ரூ.76 ஆயிரத்து 350 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

SCROLL FOR NEXT