கோயம்புத்தூர்

ஜெர்மனியில் கல்வி, வேலைவாய்ப்புக்கு வழிகாட்டி நிகழ்ச்சி

DIN

பிளஸ் 2 மாணவர்கள் ஜெர்மனியில் கல்வி, வேலைவாய்ப்பு, குடியுரிமை பெறுவதற்கான வழிகாட்டி நிகழ்ச்சி கோவையில் அண்மையில் நடைபெற்றது.
கே.சி.ஆர். கன்சல்டன்ட் நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஜெர்மனி பிரதிநிதிகள் மிட்வெய்டா, பீட்டர் மரிங், ஜிவிக்கா, பிஜர்ன் கிண்டில், கே.சி.ஆர். நிறுவன நிர்வாகிகள் ராஜ், ராஜேஷ், ஷகிலா ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றனர். இது தொடர்பாக கே.சி.ஆர். நிறுவனத்தினர் கூறும்போது, ஜெர்மன் மொழியைத் தெரிந்து கொள்வதற்காக ஸ்டடி இன் காலேஜ் பல்கலைக்கழகத்தில் ஓராண்டு அடிப்படை வகுப்பு நடத்தப்படுகிறது. இதன் பிறகு மாணவர்கள் தாங்கள் விரும்பும் இளநிலை பட்டப் படிப்பில் சேரலாம். ஜெர்மன் பல்கலைக்கழகங்களில் டியூஷன் கட்டணம் கிடையாது. சர்வதேச மாணவர்கள் பட்டப் படிப்பு முடித்தவுடனேயே ஆண்டுக்கு அதிகபட்சம் 45 ஆயிரம் யூரோக்கள் வரை ஊதியம் பெறலாம்.
பொறியியல் கல்வியில் அனைத்துப் பிரிவுகளும், பி.பி.ஏ., இ-காமர்ஸ், டிசைன், ஆர்க்கிடெக்சர், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகள் படிக்கலாம் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT