கோயம்புத்தூர்

ஒரு கோடி நகை கொள்ளை வழக்கு: 7 பேர் கைது

DIN


கோவையில் காரில் கொண்டு வரப்பட்ட நகைக் கடைக்குச் சொந்தமான ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் தொடர்புடைய 7 பேரை போலீஸார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் உள்ள பிரபல தங்க நகைக் கடையில் கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த சி.ஆர்.அர்ஜுன் (22), டி.எஸ்.வில்ஃபிரட் (31) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும், கேரள மாநிலம், திருச்சூரில் உள்ள தங்களது நிறுவனத்தின் மற்றொரு கிளையில் இருந்து கோவை கிளைக்கு கொண்டு வந்த ரூ.98.50 லட்சம் மதிப்புள்ள 3.1 கிலோ தங்க நகைகள் மற்றும் 243 கிராம் வெள்ளிப் பொருள்களுடன் நிறுவனத்துக்குச் சொந்தமான காரில் திங்கள்கிழமை வந்தனர். கோவை மாவட்டம், நவக்கரை அருகே இவர்களது கார் வந்தபோது, இரு கார்களில் வந்த கும்பல் நகைக் கடைக்குச் சொந்தமான காரை நிறுத்தி அதன் ஊழியர்களைத் தாக்கிவிட்டு காருடன் தங்கத்தைக் கொள்ளையடித்துச் சென்றது. இதுதொடர்பாக கேஜி சாவடி மற்றும் கேரள மாநில போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஏடிஎஸ்பி முத்தரசு தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர். இந் நிலையில், நகை கொள்ளை வழக்கில் தொடர்புடைய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், ஜெயபிரகாஷ் ஆகியோர் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனர். அவர்கள் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டு இருந்தனர். இதற்கிடையில் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த 7 பேரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
இந்தக் கொள்ளை வழக்கில் மொத்தம் 12 பேருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களில் 2 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். கைதான 7 பேரில் 3 பேர் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதில் தலைமறைவாக உள்ள 3 பேரிடம் தான் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகள் இருப்பதாகவும், விரைவில் அவர்களும் கைது செய்யப்படுவர் எனவும் போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT