தாசநாயக்கன்பாளையத்தில் வேன் கவிழ்ந்து 6 பேர் காயம்
சூலூர் அருகே தாசநாயக்கன்பாளையத்தில் சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்தனர்.
சூலூர் அருகே தாசநாயக்கன்பாளையத்தில் சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்தனர்.
கோட்டூர் மலையாண்டிப்பட்டினத்தைச் சேர்ந்த 16 பேர் காங்கயம் அருகே பாப்பினி பகுதியில் உள்ள தங்களது குலதெய்வ கோயிலுக்கு வேனில் செவ்வாய்க்கிழமை சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் உறவினர்கள் ஆவர். கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
சூலூர், சுல்தான்பேட்டையை அடுத்த தாசநாயக்கன்பாளையம் அருகே வரும்போது, சாலையில் உள்ள ஒரு வளைவில் திரும்பும்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த வேன், பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த நாட்ராயன் மகன் ஆறுச்சாமி (32), பாலசுப்பிரமணியன் மகன் சக்திவேல் (16), மணி மகன் செந்தில்குமார்(31), குப்புசாமி மகன் முருகானந்தம் (52), லட்சுமணன் மகன் முருகேசன் (40), முருகேசன் மகன் காளிமுத்து (18) ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.