கோயம்புத்தூர்

மாநகராட்சிப் பகுதியில் 42 ஆக்கிரமிப்பு  கட்டடங்கள் அகற்றம்

DIN

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட சாலை மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 42 கட்டடங்களை மாநகராட்சி நிர்வாகத்தினர் சனிக்கிழமை அகற்றினர்.
கோவை மாநகராட்சி, 
86 ஆவது வார்டு கரும்புக்கடை சிக்னலில் இருந்து சாரைமேடு வரையிலும் சாலை மற்றும்  நீர்நிலைகளை ஆக்கிரமித்து 42 கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தன.  இப்பகுதிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண்குமார் ஜடாவத் ஆக்கிரமிப்புக் கட்டடங்களை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி சாலை மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 42 கட்டடங்களும் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடித்து அகற்றப்பட்டது. 
இதில் மாநகராட்சி அலுவலர்கள், காவல் துறையினர், தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தினர், தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் மற்றும் வருவாய்த் துறையினர் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து ஓட்டுநா் போக்சோவில் கைது

திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி

சுட்டெரிக்கும் வெயில்: கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி மரணம்

SCROLL FOR NEXT