கோயம்புத்தூர்

சாலக்குடி வழியாக செல்ல இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி

DIN

சாலக்குடி சாலை வழியாக செல்ல 7 மாதங்களுக்கு பிறகு இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 கோவை மாவட்டம், வால்பாறையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழை காரணமாக வால்பாறையில் இருந்து கேரள மாநிலம், சாலக்குடி செல்லும் சாலை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது.
 இதையடுத்து, அவ்வழியாக இருசக்கர வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் இரண்டு மாதம் கழித்து சாலையை சீரமைப்புக்கு பின் நான்கு சக்கர வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
 ஆனால் பாதுகாப்பு கருதி இருசக்கர வாகனங்கள் செல்ல தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதனிடையே,  சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் காலை 6 மணி முதல் மாலை 4.30 மணி வரை மட்டும் இருசக்கர வாகனங்கள் செல்ல வனத் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். சுமார் 7 மாதங்களுக்கு பின் கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வால்பாறைக்கு வர துவங்கியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

குட் பேட் அக்லி படப்பிடிப்பு அப்டேட்!

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

SCROLL FOR NEXT