கோயம்புத்தூர்

சாலையோரத்தில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு

கோவையில் பெற்றோரால் கைவிடப்பட்ட நிலையில் குப்பைத்தொட்டி அருகே கிடந்த பச்சிளம் குழந்தையை போலீஸார் சனிக்கிழமை மீட்டனர்.

DIN


கோவையில் பெற்றோரால் கைவிடப்பட்ட நிலையில் குப்பைத்தொட்டி அருகே கிடந்த பச்சிளம் குழந்தையை போலீஸார் சனிக்கிழமை மீட்டனர்.
கோவை காந்திபுரம் கிராஸ் கட் இரண்டாவது வீதியில் சாலையோரம் இருந்த குப்பைத் தொட்டி அருகே சனிக்கிழமை அதிகாலை குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, அங்கிருந்த சிலர் குப்பைத் தொட்டி அருகே சென்று பார்த்தபோது பிறந்து சில நாள்களே ஆன ஆண் குழந்தை ஒன்று துணியில் சுற்றப்பட்ட நிலையில் இருந்துள்ளது.
இதுகுறித்து காட்டூர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் குழந்தையை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பச்சிளம் குழந்தை வார்டில் குழந்தை அனுமதிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக காட்டூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT