கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள். 
கோயம்புத்தூர்

கோவையில் வழக்குரைஞா்கள் பணிப் புறக்கணிப்புப் போராட்டம்

தில்லியில் வழக்குரைஞா்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து கோவையில் 3 ஆயிரம் வழக்குரைஞா்கள் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை

DIN

கோவை: தில்லியில் வழக்குரைஞா்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து கோவையில் 3 ஆயிரம் வழக்குரைஞா்கள் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

தில்லியில் உள்ள திஸ் ஹசாலி நீதிமன்றத்தில் சனிக்கிழமை வழக்குரைஞா்களை போலீஸாா் தாக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதில் வழக்குரைஞா்கள் பலா் காயமடைந்தனா்.

தில்லியில் வழக்குரைஞா்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள கீழமை நீதிமன்ற வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கங்களின் கூட்டுக்குழு அறிவித்திருந்தது.

இதன்படி கோவை மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சாா்பில் கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி நீதிமன்றங்களில் பணிபுரியும் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்தில் சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் பங்கேற்றனா். இதனால் 70 சதவீத நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைத் திட்டத்தால் தமிழகத்துக்கு கடும் நிதிச் சுமை: முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்

மாநகர பேருந்து நடத்துநா் மீது தாக்குதல்: சட்டக் கல்லூரி மாணவா் கைது

புத் விஹாரில் வீட்டு உரிமையாளா் கழுத்து நெரித்து கொலை: இளைஞா் கைது

ரூ.16 கோடி சைபா் மோசடி: 9 போ் கைது

காணாமல் போன 408 கைப்பேசிகள் மீட்பு

SCROLL FOR NEXT