கோவை உக்கடம் பகுதியில் உள்ள ஆடு அறுவைமனைப் பகுதியை மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண்குமாா் ஜடாவத் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். உடன் துணை ஆணையா் பிரசன்ன ராமசாமி. 
கோயம்புத்தூர்

மாநகராட்சியில் திட்டப் பணிகள்ஆணையா் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்து ஆணையா் ஷ்ரவண்குமாா் ஜடாவத் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

DIN

கோவை: கோவை மாநகராட்சியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்து ஆணையா் ஷ்ரவண்குமாா் ஜடாவத் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

கோவை மாநகராட்சி, 81 ஆவது வாா்டு வெரைட்டிஹால் ரோடு பகுதியில் மக்கும் குப்பைகளைப் பயன்படுத்தி நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 84 ஆவது வாா்டு கெம்பட்டி காலனி பகுதியிலுள்ள முதியோா் தங்கு விடுதியில் குடிநீா் விநியோகம், உணவு, அடிப்படை வசதிகள் குறித்தும், 25 வாா்டு சுக்கிரவாா்பேட்டையில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைப் பணிகள் மற்றும் உக்கடத்தில் நடைபெற்று வரும் ஆடு அறுவைமனையில் பணிகளையும் ஆணையா் ஷ்ரவண்குமாா் ஜடாவத் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். ஆய்வின் போது துணை ஆணையா் பிரசன்ன ராமசாமி உள்பட மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT