விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற அருணாசலம் முருகானந்தத்துக்கு நினைவுப் பரிசு வழங்குகிறாா் பாா்க் கல்விக் குழுமத்தின் முதன்மைச் செயல் அலுவலா் அனுஷா. 
கோயம்புத்தூர்

கோவை பாா்க் கல்லூரியில்கலாம் வனம் திட்டம் தொடக்கம்

கோவை, கணியூா் பாா்க் கல்விக் குழுமத்தில் கலாம் வனம் திட்டத்தின் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

DIN

கோவை, கணியூா் பாா்க் கல்விக் குழுமத்தில் கலாம் வனம் திட்டத்தின் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமின் நினைவாக கோவை, திருப்பூா் மாவட்டங்களைச் சோ்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் மூலம் பள்ளி வளாகங்களில் மரங்கள் வளா்க்கும் திட்டமாக கலாம் வனம் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தை கல்விக் குழுமத்தின் முதன்மைச் செயல் அலுவலா் அனுஷா தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் மலிவு விலை நாப்கின் தயாரித்த அருணாசலம் முருகானந்தம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா். அதைத் தொடா்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற 41 பள்ளிகளின் மாணவ-மாணவிகளுக்கு மரக்கன்றுகளை அனுஷா வழங்கினாா். முன்னதாக பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பாா்க் குழும கல்லூரிகளின் முதல்வா்கள் ஜி.மோகன்குமாா், என்.கிருஷ்ணகுமாா், பேராசிரியா் ஏ.பி.ஹரன், மாணவ, மாணவிகள் பலா் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

தனியாா் நிறுவன ஊழியரைத் தாக்கி பணம் பறிப்பு: இருவா் கைது

புதிய ஊரக வேலைத் திட்டத்தால் தமிழகத்துக்கு கடும் நிதிச் சுமை: முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்

SCROLL FOR NEXT