கோயம்புத்தூர்

மது போதையில் பெண்ணிடம் ஆபாச பேச்சு: தலைமைக் காவலர் பணியிடை நீக்கம்

DIN

கோவை மாவட்டம், கோவில்பாளையம் அருகே அத்திப்பாளையத்தில் பெண்ணிடம் மது போதையில் ஆபாசமாகப் பேசிய தலைமைக் காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்து செவ்வாய்க்கிழமை  உத்தரவிட்டார்.
பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா (35). இவர் தனது இரு சக்கர வாகனத்தில் கீரணத்தத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த அரசு மதுபானக் கடையில் இருந்து பிரபாகரன் என்ற தலைமைக் காவலர் சரண்யாவை இரு சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து ஹாரன் அடித்துக்கொண்டு வந்துள்ளார்.
இதையடுத்து, சரண்யா அத்திப்பாளையம் சாலையில் சென்று அங்கிருந்து அவரது கணவரை செல்லிடப்பேசி தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் அருகிலிருந்தவர்களிடம் கீரணத்தம் செல்லும் வழி கேட்டுள்ளார். அப்போது, காவலர் பிரபாகரன் நான் வழி காட்டுகின்றேன் என்று கூறி காட்டு வழியாகச் செல்லும் பாதையைக் காண்பித்துள்ளார்.
அந்த வழியாக சரண்யா சென்றபோது, பிரபாகரன் மீண்டும் அவரைப் பின்தொடர்ந்து சென்று ஆபாசமாகப் பேசியுள்ளார். இதில், பிரபாகரன் குடிபோதையில் இருந்ததாகத் தெரிகிறது. 
இதையடுத்து, சரண்யா அருகில் இருந்த கடையில் தஞ்சமடைந்துள்ளார். அந்தக் கடையில் இருந்தவரிடம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். 
அதற்குள் கடை உரிமையாளரின் வீட்டிற்கு சிலிண்டர் வந்ததால் அதை வாங்குவதற்காக அவர் சென்றுள்ளார். அப்போதும், பிரபாகரன் சரண்யாவிடம் ஆபாசமாக பேசியுள்ளார். 
இந்நிலையில், சரண்யாவின் கணவர் அங்கு வந்துள்ளார். இதையடுத்து, பிரபாகரன் அருகில் இருந்த கடைக்குள் சென்று வெளியே வர மறுத்துள்ளார். தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் கடைக்குள் இருந்த காவலர் பிரபாகரனை வெளியே அழைத்து வந்து கோவில்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து கோவில்பாளையம் காவல் நிலையத்தில் சரண்யா புகார் அளித்தார். இந்நிலையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், பெண்ணிடம் மது போதையில் ஆபாசமாகப் பேசிய தலைமைக் காவலர் பிரபாகரனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT