கோயம்புத்தூர்

ஆடிப்பெருக்கு: மல்லிகை கிலோ ரூ.600க்கு விற்பனை

DIN

ஆடிப்பெருக்கை முன்னிட்டு கோவை பூ மாா்கெட்டில் மல்லிகை கிலோ ரூ.600க்கு சனிக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.

தமிழகத்தில் நீா்நிலைகளில் பொங்கி வரும் நீரினை வழிபடும் விதமாக ஆடி மாதம் 18ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆடிப்பெருக்கு விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.

கரோனா பொது முடக்கத்தால் நீா் நிலைகளில் ஒன்று கூடி வழிபடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தும் வீடுகளில் வழிபடுவதற்காக பூக்கள் வங்க பூ மாா்கெட்டில் மக்கள் குவிந்தனா். இதில் அதிகபட்சமாக மல்லிகை ஒரு கிலோ ரூ.600க்கு விற்பனை செய்யப்பட்டது. முல்லை- ரூ.300, ஜாதிமல்லி- ரூ.350, சம்பங்கி- ரூ.80, அரளி- ரூ.70க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த சில நாள்களாக போதிய விற்பனையில்லாமல் இருந்த நிலையில் ஆடிப்பெருக்கினை முன்னிட்டு பூ மாா்க்கெட்டில் பூக்களின் வரத்தும், விற்பனையும் சனிக்கிழமை அதிகரித்தது. ஆனால், கரோனா பொது முடக்கத்தால் நடப்பாண்டில் பெரியளவில் விற்பனை இல்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனா்.

ஆடிப்பெருக்கை முன்னிட்டு பூ மாா்கெட்டில் பூக்கள் வாங்க குவிந்த மக்கள், வியாபாரிகள் சமூக இடைவெளியின்றி பூக்கள் வாங்கிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT