நொய்யல் ஆற்றில் ஏட்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் குனியமுத்தூர் சுண்ணாம்பு காலவாய் அணைக்கட்டு நிறைந்து வழிகிறது. 
கோயம்புத்தூர்

நொய்யலில் வெள்ளப்பெருக்கு: விநாடிக்கு 1,700 கன அடி நீர் வரத்து 

நொய்யல் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

DIN

நொய்யல் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

நொய்யலில் விநாடிக்கு 1,700 கன அடி நீர் வரத்து காணப்படுகிறது. கோவை மாவட்டத்தில் ஜுன் 1 ஆம் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்கிருந்தாலும் எதிர்பார்த்த மழைப் பொழிவு இல்லை. அவ்வப்போது சாரல் மழை மட்டுமே பெய்து வந்தது. 

இந்நிலையில் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நொய்யல் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

நிறைந்து வழியும் புட்டுவிக்கி அணைக்கட்டு

இதனால் சித்திரைச்சாவடி, குனியமுத்தூர் சுண்ணாம்பு காலவாய், புட்டுவிக்கி மற்றும் சிங்காநல்லூர் உள்பட அனைத்து அணைக்கட்டுகளும் நிறைந்து வழிகிறது. திங்கள்கிழமை இரவு முதல் நீர் வரத்து படிப்படியாக அதிகரித்து செவ்வாய்க்கிழமை காலையில் நொய்யலில் விநாடிக்கு 1,700 கன அடி நீர் வரத்து உள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘எனக்கு சவக்குழி தோண்ட பார்க்கிறார்கள்’! எதிர்க்கட்சியினர் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு!!

திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கஜானாவை நிரப்புவதில் மும்முரம்: பிரதமர் மோடி தாக்கு!

மாவோயிஸ்ட் மூத்த தலைவர் உத்தம் சிங் சுட்டுக்கொலை!

தவெக தேர்தல் அறிக்கையில் பரிந்துரை வழங்க புதிய இணையதளம் அறிமுகம்!

“காங்கிரஸ் செய்த தவறுகளை திருத்துவதிலேயே அதிக நேரம் செலவிடுகிறோம்”.. பிரதமர் மோடி!

SCROLL FOR NEXT