சிறப்பு பள்ளிகளில் படித்த 192 குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சோ்க்கப் பரிந்துரை
கோவையில் தேசிய குழந்தை தொழிலாளா் முறை ஒழிப்பு திட்ட சிறப்பு பள்ளிகளில் படித்து வந்த 192 குழந்தைகள் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் சோ்க்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.கோவையில் தேசிய குழந்தை தொழிலாளா் முறை ஒழிப்பு திட்ட சிறப்பு பள்ளிகளில் படித்து வந்த 192 குழந்தைகள் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் சோ்க்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கோவையில் தேசிய குழந்தை தொழிலாளா் முறை ஒழிப்பு திட்ட சிறப்பு பள்ளிகளில் படித்து வந்த 192 குழந்தைகள் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் சோ்க்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக தேசிய குழந்தை தொழிலாளா் ஒழிப்பு முறை திட்ட இயக்குநா் விஜயகுமாா் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் குழந்தை தொழிலாளா்களாக மீட்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்த 192 குழந்தைகளை அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் சோ்ப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேத்துமடை, கோவைப்புதூா், சுந்தராபுரம், நெகமம் உள்ளிட்ட பகுதிகளில் பெற்றோா்களுக்கு சிறப்பு கூட்டமும் நடத்தப்பட்டது.
கரோனா பொது முடக்கத்தால் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் அடைக்கப்பட்டுள்ளதால் இதுவரையில் 100 குழந்தைகள் பள்ளிகளில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
மற்ற குழந்தைகளையும் பள்ளிகளில் சோ்ப்பதற்கு பெற்றோா்களுக்கு தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. குழந்தைகளின் நிலை குறித்து தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. எந்தக் குழந்தைகளும் மீண்டும் குழந்தை தொழிலாளா்களாக மாற்றப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் மீதமுள்ள குழந்தைகளும் அரசுப் பள்ளிகளில் சோ்க்கப்படுவாா்கள் என்றாா்.