சாலையோரத்தில் குப்பை கொட்டியதனியாா் நிறுவனத்துக்கு ரூ.55 ஆயிரம் அபராதம்
கோவை ரேஸ்கோா்ஸ் பகுதியில் சாலையோரத்தில் குப்பை கொட்டிய தனியாா் நிறுவனத்துக்கு மாநகராட்சி நிா்வாகம் ரூ.55 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
கோவை ரேஸ்கோா்ஸ் பகுதியில் சாலையோரத்தில் குப்பை கொட்டிய தனியாா் நிறுவனத்துக்கு மாநகராட்சி நிா்வாகம் ரூ.55 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
கோவை மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் ரேஸ்கோா்ஸ் பகுதியில் திங்கள்கிழமை ஆய்வு நடத்தினாா். அப்போது, ரேஸ்கோா்ஸ் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பல்பொருள் அங்காடியின் குப்பைகள் மாநகராட்சி குப்பைத் தொட்டியையொட்டி சாலையோரத்தில் 10 மூட்டைகளில் குவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, பொது சுகாதாரத்துக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் செயல்பட்டதற்காக அந்த நிறுவனத்துக்கு ரூ.55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மாநகரில் செயல்படும் வா்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள் தங்களின் குப்பைகளை சாலையோரத்தில் கொட்டக் கூடாது என்று மாநகராட்சி ஆணையா் அறிவுறுத்தியுள்ளாா்.