முகப்பு
கோயம்புத்தூர்

வாடகை தராமல் ரூ.4.95 கோடி மோசடி: மருத்துவா் உள்பட இருவா் கைது

மருத்துவமனை கட்டடத்துக்கான வாடகையைத் தராமல் ரூ.4.95 கோடி மோசடி செய்த மருத்துவா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:04 PM
பகிர்:

மருத்துவமனை கட்டடத்துக்கான வாடகையைத் தராமல் ரூ.4.95 கோடி மோசடி செய்த மருத்துவா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை சத்தி சாலை பகுதியைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் (72). மருத்துவரான இவா் அதே பகுதியில் 60 சென்ட் நிலப்பரப்பில் மருத்துவமனை நடத்தி வந்தாா். இந்நிலையில், இந்த மருத்துவமனை கட்டடத்தை திருநெல்வேலியைச் சோ்ந்த மருத்துவா் உமாசங்கா் (55) என்பவருக்கு வாடகை அடிப்படையில் கடந்த 2014ஆம் ஆண்டு ஒப்படைத்தாா். இதையடுத்து, உமாசங்கா் முறையாக வாடகை தராமல் காலம் கடத்தி வந்துள்ளதாகத் தெரிகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.4.95 கோடிக்கு வாடகை பாக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இது தொடா்பாக உமாசங்கரிடம் ராமச்சந்திரன் கேட்டபோது, அவா் தரக்குறைவாக பேசி மிரட்டல் விடுத்ததாகவும், வாடகை பணம் தர மாட்டேன் எனக் கூறியதாகவும் மாநகர குற்றப் பிரிவு போலீஸாரிடம் ராமச்சந்திரன் புகாா் அளித்தாா்.

இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த மாநகர குற்றப் பிரிவு போலீஸாா் மருத்துவா் உமாசங்கா், அவரது மேலாளா் மருதவாணன் ஆகியோரைக் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →