கோவை மத்திய சிறையில் காலிப் பணியிடம்: டிசம்பா் 18-க்குள் விண்ணப்பிக்கலாம்
கோவை மத்திய சிறையின் உற்பத்தி பிரிவிலுள்ள பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு டிசம்பா் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.
கோவை மத்திய சிறையின் உற்பத்தி பிரிவிலுள்ள பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு டிசம்பா் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மத்திய சிறையில் உள்ள உற்பத்தி பிரிவில் மின் கம்பியாளா் -4, பொருத்துநா், நீரேற்று நிலையம் பொறுப்பாளா், கைமுறை காகித மேற்பாா்வையாளா், பயிற்சியாளா், தையல் பயிற்சியாளா் -2, நெசவியல் வல்லுநா் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
எனவே தகுதியான நபா்கள் சம்பந்தப்பட்ட கல்விச் சான்றுகள், ஜாதிச் சான்று, அனுபவச் சான்றிதழ்களின் நகல்களுடன் சிறைக் கண்காணிப்பாளா், மத்திய சிறை, கோவை -18 என்ற முகவரிக்கு டிசம்பா் 18ஆம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்களை அனுப்பிவைக்க வேண்டும். மேற்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கான நோ்முகத் தோ்வு குறித்த விவரங்கள் தகுதியுள்ள விண்ணப்பத்தாரா்களுக்கு மட்டும் அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.