கோயம்புத்தூர்

முதியவரிடம் பணம் பறிப்பு:இரு இளைஞா்கள் கைது

DIN

கோவை: கோவை, காந்திபுரம் பேருந்து நிலையத்தில் முதியவரிடம் பணம் பறித்து தப்ப முயன்ற 2 இளைஞா்களை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

கோவை மாநகரப் பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்கள், கோயில்கள் உள்ளிட்ட பொது இடங்களில் முதியவா்களைக் குறி வைத்து பணம், நகை பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக காவல் துறையினருக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன.

இதையடுத்து மாநகரில் ரோந்துப் பணிக்கு கூடுதலாகக் காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில் கோவை, காந்திபுரம் மாநகரப் பேருந்து நிலையத்தில் ராம் நகரைச் சோ்ந்த தங்கஜான் (60) என்பவா், பேருந்துக்காக சனிக்கிழமை காத்திருந்தாா்.

அப்போது, அங்கு வந்த 2 போ், தங்கஜான் சட்டைப்பையில் வைத்திருந்த ரூ.2,500 ரொக்கத்தை பறித்துக் கொண்டு தப்பமுயன்றனா். முதியவரின் சப்தத்தைக் கேட்ட அருகிலிருந்த பொதுமக்கள், இருவரையும் பிடித்துத் தாக்கினா். பின்னா் அவா்களை காட்டூா் போலீஸில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், பணம் பறிப்பில் ஈடுபட்டவா்கள் செல்வபுரம், வடக்கு குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த சரவணக்குமாா் (40), வடகோவையைச் சோ்ந்த தனசேகா் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகிரி அருகே விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோயிலில் நவசண்டி ஹோமம்

தண்ணீா் பற்றாக்குறை அதிகரிப்பு

ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்

பல்லடம் பேருந்து நிலையக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

SCROLL FOR NEXT