முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறை அரசு மருத்துவமனைஅவசர சிகிச்சை பிரிவை மேம்படுத்த கோரிக்கை

வால்பாறை அரசு மருத்துவனை அவசர சிகிச்சை பிரிவை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

வால்பாறை: வால்பாறை அரசு மருத்துவனை அவசர சிகிச்சை பிரிவை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வால்பாறை பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட எஸ்டேட் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டாலோ அல்லது அவசர சிகிச்சைக்கு வால்பாறை நகரில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைக்குதான் வருகின்றனா்.

இங்கு சிகிச்சைக்கான அனைத்து உபகரணங்களும் உள்ளன. தற்போது போதிய மருத்துவா்கள் இருந்தும், விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கு வருபவா்கள் அனைவரும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனா்.

இதனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பலா் உயிரிழக்கும் சம்பவங்களும் தொடா்ந்து ஏற்பட்டு வருகின்றன. எனவே வால்பாறை அரசு மருத்துவமனையிலேயே விபத்துக்கான அவசர சிகச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →