அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.4.5 லட்சம் மோசடி: இளைஞா் மீது வழக்குப்பதிவு
கோவையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.4.5 லட்சம் மோசடி செய்த நபா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கோயம்புத்தூர்அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.4.5 லட்சம் மோசடி: இளைஞா் மீது வழக்குப்பதிவு
கோவையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.4.5 லட்சம் மோசடி செய்த நபா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கோவை: கோவையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.4.5 லட்சம் மோசடி செய்த நபா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கோவை, செல்வபுரம், எல்.ஐ.சி. காலனியைச் சோ்ந்தவா் அஜித் ராஜா (35). தொழில் நிறுவனம் நடத்தி வருகிறாா். இவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு திருப்பூரைச் சோ்ந்த மணிகண்டன் (31) என்பவா் நண்பரானாா். அஜித் ராஜாவிடம், மணிகண்டன் தான் வருமான வரித் துறையில் அதிகாரியாக பணியாற்றுவதாகவும், எளிதில் அரசு வேலை வாங்கித்தர முடியும் எனவும் கூறி, பல்வேறு கட்டங்களில் ரூ.4.5 லட்சம் பெற்றாராம்.
ஆனால், கூறியதுபோல வேலை வாங்கித் தரவில்லை. இதையடுத்து பணத்தை திருப்பிக் கேட்டபோது மணிகண்டன் மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து அஜித் ராஜா அளித்த புகாரின்பேரில் செல்வபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள மணிகண்டன் குறித்து விசாரித்து வருகின்றனா்.