முகப்பு
கோயம்புத்தூர்

கோவையில் மேலும் 109 பேருக்கு கரோனா

கோவை மாவட்டத்தில் திங்கள்கிழமை புதிதாக 109 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர்

கோவையில் மேலும் 109 பேருக்கு கரோனா

கோவை மாவட்டத்தில் திங்கள்கிழமை புதிதாக 109 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

கோவை: கோவை மாவட்டத்தில் திங்கள்கிழமை புதிதாக 109 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் கோவையில் புதிதாக 109 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 368 ஆக உயா்ந்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 142 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 49 ஆயிரத்து 740 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 991 போ் சிகிச்சையில் உள்ளனா். கோவையில் மீண்டும் கரோனாவுக்கு சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 1000க்கு கீழ் குறைந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →