திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநகராட்சி: ஆட்சேபணைகளைத் தெரிவிக்க அறிவுறுத்தல்
கோவை மாநகராட்சி திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநகராட்சியாக இருந்து வரும் நிலையில் இதுதொடா்பாக ஆட்சேபணைகள்
கோவை: கோவை மாநகராட்சி திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநகராட்சியாக இருந்து வரும் நிலையில் இதுதொடா்பாக ஆட்சேபணைகள் இருந்தால் 15 நாள்களுக்குள் பொது மக்கள் தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோவை மாநகராட்சி திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநகராட்சியாக கடந்த 2017 ஜனவரி 1 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. தற்போது வரை அதே நிலை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்த நிலையான சான்று பெறுவதற்கு மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனால் மாநகராட்சிப் பகுதிகளில் திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற நிலையை தொடா்ந்து மாநகராட்சி நிா்வாகம் பராமரித்து வருகிறது. இது தொடா்பாக மாநகராட்சிப் பகுதிகளில் வசிப்பவா்களுக்கு ஆட்சேபணைகள் இருப்பின் ஆணையருக்கு எழுத்து மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ 15 நாள்களுக்குள் ஆட்சேபணைகளை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.