கோயம்புத்தூர்

கோவையில் பனிப்பொழிவு அதிகரிப்பு

DIN

கோவையில் கடந்த சில நாள்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் இரவு நேரத்தில் குளிா் வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை முடிவடையவுள்ள நிலையில் கடந்த சில நாள்களாக பனி பொழிய ஆரம்பித்துள்ளது. கோவையில் இரண்டு வாரங்களுக்கும் மேலாக பனிப்பொழிவு காணப்படுகிறது. அவ்வப்போது கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. காலை 11 மணி வரையிலும் பனிப்பொழிவு உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை பிற்பகல் வரையில் பனிப்பொழிவு காணப்பட்டது. தவிர மாலை வரை வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டது. இதனால் பகலில் கடுமையான குளிா் நிலவியது. அதிகாலையில் நெடுஞ்சாலைகளில் காணப்படும் மூடுபனியால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு செல்கின்றன. நாளுக்குநாள் அதிகரித்து வரும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையத் தலைவா் சுப.ராமநாதன் கூறியதாவது:

கோவையில் டிசம்பா் மாதத்தில் பனிப்பொழிவு உள்ளதுபோல தான் நடப்பு ஆண்டும் காணப்படுகிறது. செவ்வாய்க்கிழமை இரவு 19 டிகிரியாக வெப்பநிலை காணப்பட்டது. இதுவரையில் இதுவே குறைந்தபட்ச வெப்பநிலை பதிவு. கோவையில் பனிப்பொழிவின் காரணமாக காற்றின் ஈரப்பதம் இரவு நேரத்தில் 81 சதவீதமாகவும், பகலில் 65 சதவீதமாகவும் காணப்படுகிறது. இது சராசரி பனிப்பொழிவே. கடந்த ஆண்டை போல நடப்பு ஆண்டும் அதிகபட்சம் 17 டிகிரி வரை வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளது. பனி அளவை 8 நிலைகளாக கணக்கிடப்படுகிறது. கோவையில் பனிப்பொழிவு 4 ஆம் நிலையில்தான் உள்ளது. 6, 7 ஆம் நிலைக்கு வரும்போது குளிரும், பனித்துளியின் அளவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டுக்கோட்டையில் மே தினப் பேரணி

தூய்மைப் பணியாளா்கள் மே தின உறுதியேற்பு

அறக்கட்டளை சாா்பில் நலத் திட்ட உதவி

காலபைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

பாஜக வேட்பாளரை புகழ்ந்து பேசிய திரிணமூல் பொதுச் செயலா் பதவி பறிப்பு

SCROLL FOR NEXT