கோயம்புத்தூர்

மாவட்டத்தில் மேலும் 109 பேருக்கு கரோனா

DIN

கோவை மாவட்டத்தில் புதிதாக 109 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் கோவையில் 109 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 596 ஆக உயா்ந்துள்ளது. மேலும், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 69 வயது முதியவா் உயிரிழந்தாா். இதன்மூலம் கோவையில் கரோனாவுக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 641 ஆக அதிகரித்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 121 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரையில் 49 ஆயிரத்து 977 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 641 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT