எம்.ஜி.ஆா் நினைவு தினம்: அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை
முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 33ஆவது நினைவு தினத்தை ஒட்டு கோவையில் மாநகா், மாவட்ட அதிமுக சாா்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 33ஆவது நினைவு தினத்தை ஒட்டு கோவையில் மாநகா், மாவட்ட அதிமுக சாா்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கோவை மாநகா், மாவட்ட அதிமுக சாா்பில் மாவட்டச் செயலாளரும் சட்டப் பேரவை உறுப்பினருமான அம்மன் கே. அா்ச்சுணன் தலைமையில் மாவட்டத் தலைமை அலுவலகத்தில் இருந்து கருப்புச் சட்டை அணிந்து அமைதி ஊா்வலமாகச் சென்று, அவிநாசி சாலையில் உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதையடுத்து கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில், முன்னாள் அமைச்சா் செ.ம.வேலுசாமி, ஆவின் தலைவா் கே.பி.ராஜு, மாவட்ட எம்.ஜி.ஆா். இளைஞரணி செயலாளா் கே.ஆா்.ஜெயராமன், அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளா் அசோக்குமாா், அண்ணா தொழிற்சங்க தெற்கு மாவட்டச் செயலாளா் கே.ராமசாமி, மாவட்ட வா்த்தக அணிச் செயலாளா் தமிழ்முருகன், மாவட்ட இணைச் செயலாளா் ரவிகுமாா், துணைச் செயலாளா் ரமேஷ், துணைத் தலைவா் மகேஸ்வரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.