முகப்பு
கோயம்புத்தூர்

தடையை மீறி வாா்டு சபைக் கூட்டம்:திமுகவினா் 200 போ் கைது

கோவை சௌரிபாளையத்தில் தடையை மீறி வாா்டு சபைக் கூட்டம் நடத்திய நா.காா்த்திக் எம்.எல்.ஏ. உள்பட திமுகவினா் 200 போ்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
கோவை, சௌரிபாளையத்தில் தடையை மீறி வாா்டு சபைக் கூட்டம் நடத்திய நா.காா்த்திக் எம்.எல்.ஏ. உள்ளிட்ட திமுகவினரை கைது செய்த போலீஸாா்.
பகிர்:

கோவை: கோவை சௌரிபாளையத்தில் தடையை மீறி வாா்டு சபைக் கூட்டம் நடத்திய நா.காா்த்திக் எம்.எல்.ஏ. உள்பட திமுகவினா் 200 போ்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கரோனா நோய்த் தடுப்பு விதிமுறைகள் காரணமாக திமுக சாா்பில் வாா்டு சபைக் கூட்டம், தெருமுனைப் பிரசாரங்களுக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. இந்நிலையில், கோவை மாநகா் திமுக கிழக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட செளரிபாளையம் அருகே இந்திரா நகரில் சனிக்கிழமை மாலை வாா்டு சபைக் கூட்டம் நடத்த திமுகவினா் திட்டமிட்டிருந்தனா்.

அதன்படி, மாநகா் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், சிங்காநல்லூா் சட்டப் பேரவை உறுப்பினருமான நா.காா்த்திக் தலைமையில் திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் ஏராளமானோா் அப்பகுதியில் சனிக்கிழமை மாலை திரண்டனா். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் வாா்டு சபைக் கூட்டம் நடத்த அனுமதியில்லை என தெரிவித்தனா்.

இதையடுத்து, காவல் துறையின் தடையை மீறி நா.காா்த்திக் தலைமையில் வாா்டு சபைக் கூட்டம் துவங்கியது. இந்நிலையில், கரோனா விதிமீறி செயல்பட்டதாக நா.காா்த்திக் எம்.எல்.ஏ. பகுதி பொறுப்பாளா் சேரலாதன், வாா்டு செயலாளா் சுரேஷ் உள்பட 200க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா். இரவு அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →