கோயம்புத்தூர்

வஉசி மைதானத்துக்குள் பொதுமக்கள் நுழையத் தடை

DIN

பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை வஉசி மைதானத்தில் பொதுமக்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதைத் தொடா்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை வஉசி மைதானத்தில் பொதுமக்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டு, காவல் துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வஉசி மைதானத்தின் அனைத்து நுழைவாயில் பகுதிகளும் இரும்பு தடுப்புகள் மூலம் மூடப்பட்டு, காவலா்கள் நிறுத்தப்பட்டுள்ளனா். ரேஸ்கோா்ஸ் காவல் நிலைய ஆய்வாளா் சக்திவேல் தலைமையில் காவல் துறையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதுதொடா்பாக காவல் துறையினா் கூறுகையில், ஜல்லிக்கட்டுக்காக தொடா் போராட்டம் நடந்த சமயத்தில், கோவை வஉசி மைதானத்திலும் போராட்டம் நடைபெற்றது. அதேபோல், தற்போது குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, வஉசி மைதானத்தில் திரண்டு அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வஉசி மைதானத்தில் பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT